"மகளிர் உரிமைத்தொகை" மாதம் ரூ.1000 வரும் செப்டம்பர் 15 முதல் வழங்கப்படும்-தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரம்
|'மகளிர் உரிமைத்தொகை' தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து உள்ளார்.
Live Updates
- 20 March 2023 1:18 PM IST
புதிய காலணி தொழிற்சாலைகள்
ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் அமைக்கப்படும்
- 20 March 2023 1:16 PM IST
மின்சார வாகன உற்பத்தி
இந்தியாவில் உற்பத்தியான மின்சார வாகனங்களில் 46 சதவீதம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை. பசுமை வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதல் இடம்.
- 20 March 2023 1:14 PM IST
சட்டம்-ஒழுங்கு
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வதந்தி வீடியோ பரப்பிய சமூகவிரோதிகள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 20 March 2023 1:11 PM IST
அனைத்து அரசு துறை சேவை முகாம்
ஊராட்சி மற்றும் நகராட்சிகளில் அனைத்து அரசு துறை சேவை முகாம்கள் நடத்தப்படும்
- 20 March 2023 1:07 PM IST
மனுக்களுக்கு தீர்வு
முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தின் மூலம் பெறப்பட்ட 17.7 லட்சம் மனுக்களில் 17.3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
- 20 March 2023 1:02 PM IST
முதலீடு
ரூ.2 லட்சம் கோடி முதலீடுகள் பெறும் வகையில் 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது
- 20 March 2023 1:02 PM IST
அரசு ஊழியர்களுக்கு வீடு கடன் உயர்வு
அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் 40 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
- 20 March 2023 1:00 PM IST
மின்துறை
2030-ம் ஆண்டுக்குள் 14,500 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மின்சாரத்துறையின் நிதி நிலை மேம்படுத்தப்படும்
- 20 March 2023 12:58 PM IST
ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.