ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உட்கொள்ள வேண்டிய உணவுகள்!
நீரிழிவு நோயைத் தடுக்க விரும்புபவர்கள், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்பும் நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் குறித்து பார்க்கலாம்.
புரோக்கோலி: புரோக்கோலியில் சல்போராபேன் எனப்படும் சேர்மம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது நீரிழிவு எதிர்ப்பு விளைவை குறிப்பிடத்தக்க அளவில் கொண்டிருப்பதால் ரத்த சர்க்கரையை குறைக்கும் திறனுடையது.
சியா - ஆளி விதைகள்: நீரிழிவு நோயாளிகளுக்கு, சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் நன்மை சேர்க்கும். உடல் எடையை நிர்வகிப்பதற்கும், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும் சியா விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முட்டை: முட்டைகள் சாப்பிடுவதும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும். ஏனெனில் முட்டைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. அவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த வழிவகுக்கும்.
பீன்ஸ்-பயறு: இவை ஊட்டச்சத்து நிறைந்தவை மட்டுமல்ல, கரையக்கூடிய நார்ச்சத்துக்களையும் கொண்டவை. செரிமான செயல்முறையை மெதுவாக்கும். மேலும் ரத்த சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதையும் தடுக்கும்.
நட்ஸ் வகைகள்: பாதாம், வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகள், அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் (நட்ஸ் பட்டர்) ஆகியவை ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதிலும், டைப் - 2 நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டுள்ளன.
வெண்டைக்காய்: இது நீரிழிவு நோயாளிகளுக்கு நலம் சேர்க்கக்கூடியது. இதில் பிளாவனாய்டுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள் நிறைந்துள்ளன. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடியவை.
சியா விதைகளைப் போலவே, நட்ஸ் வகைகளிலும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. எளிதில் ஜீரணிக்கக்கூடிய கார்போஹைட்ரேட்டுகளை கொண்டுள்ளது.