சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு


சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 27 Sep 2024 1:50 AM GMT (Updated: 27 Sep 2024 6:57 AM GMT)

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் மேற்கு திசைக்காற்றில் ஏற்பட்டுள்ள வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 30-ம் தேதி வரை சில இடங்களில் இடி,மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 35முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story