மகளிர் பிரீமியர் லீக்: போட்டி அட்டவணை அறிவிப்பு

முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
மகளிர் பிரீமியர் லீக்: போட்டி அட்டவணை அறிவிப்பு
Published on

மும்பை,

4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பை மற்றும் வதோதராவில் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி முதல் பிப்ரவரி 5-ந் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு வீராங்கனைகள் ஏலம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்று இருந்தனர்.

பிரபல ஏலதாரர் மல்லிகா சாகர் ஏலத்தை நடத்தினார். போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட 5 அணிகளும் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளை குறி வைத்து ஏலம் கேட்டனர். மொத்தம் 67 வீராங்கனைகளை ரூ.40.80 கோடிக்கு அணிகள் வாங்கின.

இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. நவிமும்பையில் நடக்கும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

இதன் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் (11) அனைத்தும் நவிமும்பையில் நடைபெற உள்ளன. இறுதிபோட்டி உட்பட எஞ்சிய போட்டிகள் அனைத்தும் வதோதராவில் நடைபெற உள்ளன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com