மகளிர் பிரீமியர் லீக்: குஜராத்திற்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு

மகளிர் பிரீமியர் லீக் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மகளிர் பிரீமியர் லீக்: குஜராத்திற்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு
Published on

காந்தி நகர்,

5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் குஜராத்தின் வதோதராவில் இன்று நடைபெற்று வரும் 12வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய பெங்களூரு அணியின் கவுதமி அதிகபட்சமாக 55 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார்.

குஜராத் தரப்பில் அந்த அணியின் கேஷ்வி, கார்ட்னெர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் குஜராத் களமிறங்கி விளையாடி வருகிறது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com