தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: சுப்மன் கில் விலகல்

இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: சுப்மன் கில் விலகல்
Published on

மும்பை,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் கழுத்து பிடிப்பு காயத்தால் வெளியேறிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

சுப்மன் கில் மும்பையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார் . இந்த நிலையில் வருகிற 30-ந் தேதி தொடங்கும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் சுப்மன் கில் விளையாடமாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயத்தின் தன்மை தீவிரமாக இருப்பதால் அவரால் அடுத்த ஆண்டு தான் களம் திரும்ப முடியும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com