சி.எஸ்.கே எடுக்கவில்லை என்றால் இந்த அணியில் இடம் பெற விரும்புகிறேன் - துஷார் தேஷ்பாண்டே


சி.எஸ்.கே எடுக்கவில்லை என்றால் இந்த அணியில் இடம் பெற விரும்புகிறேன் - துஷார் தேஷ்பாண்டே
x

கோப்புப்படம்

தினத்தந்தி 23 Nov 2024 8:31 AM IST (Updated: 23 Nov 2024 12:59 PM IST)
t-max-icont-min-icon

2025 ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் நாளை, நாளை மறுநாள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

2025 ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலம் நாளை, நாளை மறுநாள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் கடந்த அக்டோபர் 31-ம் தேதி அன்று தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தன.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. பஞ்சாப் 2, பெங்களூரு 3, டெல்லி 4, ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வீரர்களை தக்க வைத்துள்ளது.

ஆச்சரியம் அளிக்கும் வகையில் ரிஷப் பண்ட் (டெல்லி), லோகேஷ் ராகுல் (லக்னோ), ஸ்ரேயஸ் ஐயர் (கொல்கத்தா), அர்ஷ்தீப் சிங் (பஞ்சாப்) போன்ற முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள். இவர்களின் அடிப்படை விலை ரூ. 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி, மதீஷா பதிரனா, ஷிவம் துபே ஆகியோரை தக்கவைத்தது. கடந்த ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக சிறப்பாக செயல்பட்ட துஷார் தேஷ்பாண்டேவை வெளியிட்டது. அதன் காரணமாக தேஷ்பாண்டேவும் ஏலத்திற்கு வருகிறார். அவரை சென்னை அணி ஏலத்தில் எடுக்கும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை அணி ஏலத்தில் எடுக்கவில்லை என்றால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட ஆசைப்படுவதாக துஷார் தேஷ்பாண்டே சில கருத்துக்களை கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, சி.எஸ்.கே இல்லை என்றால் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து ஏலம் பெற விரும்புகிறேன். ஏனென்றால் அது எனது சொந்த அணி. உங்களது சொந்த அணிக்காக சொந்த மக்கள் முன்னிலையில் விளையாடுவது ஒரு வித்தியாசமான உணர்வு.

நான் வான்கடே மைதானத்தில் இரண்டு முறை விளையாடியுள்ளேன். உங்கள் சொந்த மாநில மக்கள் முன்னாள் விளையாடுவது வித்தியாசமான உணர்வு. நான் மஞ்சள் ஜெர்சியில் விளையாடாவிட்டாலும் மக்கள் என்னை உற்சாகப்படுத்தினர். எனவே சென்னை அணியில் இடம் பெறாவிட்டால் நான் மும்பை அணியில் விளையாட ஆசைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story