இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் தாம்பத்ய குறைபாடு குறையுமா?

இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் தாம்பத்ய குறைபாடு குறையுமா?

இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் தாம்பத்ய குறைபாடு குறையுமா?
பல ஆண்களுக்கு ஆரம்ப கால தாம்பத்ய வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், நாளாக தாம்பத்தியத்தின் ஏதோ ஒரு பகுதியில் திருப்தியில்லாத நிலைகளால் மன ரீதியாக பாதிப்புக்குள்ளாகி, தொடர்ந்து உடலில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் தாம்பத்ய குறைபாடு குறையுமா?
உணவில் குறிப்பிட்ட அமினோ அமிலங்கள், உயிர்ச்சத்துக்கள், ஹார்மோன்கள் ஆகியவை இல்லற வாழ்வில் திருப்தியைத் தருபவை. இத்தகைய அமிலங்கள் எந்த உணவுகளில் நிறைந்துள்ளது என்பதை காணலாம்.
இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் தாம்பத்ய குறைபாடு குறையுமா?
ஆர்ஜினின்: இது ரத்தத்திலுள்ள நைட்ரிக் ஆக்சைடு அளவை சீராக்கி ஆண் குறிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்த அடைப்புகளை நீக்குகிறது. ஆர்ஜினின் நிறைந்த உணவுகள் பாதாம், பிஸ்தா, சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா
கார்னிடைன்: இதுவும் அமினோ அமிலம். இது ஆண்குறிக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, இரத்த குழல்களை நெகிழ்வடையச் செய்து, நைட்ரிக் ஆக்சைடன் தூண்டுதலால் கவர்னோசா சதைகளை இரத்தத்தால் நிரப்புகிறது. கார்னிடைன் நிறைந்த உணவுகள் சிக்கன், பால், வெண்ணெய், முட்டை.
புரோமிலென் என்ற என்சைம் வாழைப்பழத்தில் அதிகளவு உள்ளது, இது மனதில் தாம்பத்ய ஆசையை அதிகரிக்கிறது. குறிப்பாக நேந்திர வாழைப்பழம், செவ்வாழைப்பழம் சிறந்தது.
அவகோடா: இது விதைப்பை மரம் (Testicle Tree) என்றழைக்கப்படுகிறது. இதிலுள்ள புரதங்கள் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது.
லைக்கோபீன்: இது தக்காளியில் உள்ள முக்கியமான அமினோ அமிலம். இது விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு தக்காளியில் உள்ள லைக்கோபீன் ஒரு அருமருந்து.
சிட்ருலின்: இந்த அமினோ அமிலம் இயற்கையாகவே உடலில் உற்பத்தியாகும். இது உடலில் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரித்து, இரத்த நாடி, நாளங்களை விரிவடையச் செய்கிறது. சிட்ருலின் நிறைந்த உணவுகள் தர்ப்பூசணி, ஆரஞ்சு, சாக்லேட், எலுமிச்சை.
டைரோசின்: இந்த அமினோ அமிலம் அதிகரிக்கும்போது உடலில் "டோபமைன் "அளவும் அதிகரிக்கிறது, இது மனதுக்கும் உடலுக்கும் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தருகிறது. டைரோசின் நிறைந்த உணவுகள் பூசணி விதைகள், எள்.