சப்போட்டா பழத்தில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ, பொட்டாசியம், கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
சப்போட்டா பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, தொற்றுநோய் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது.
சப்போட்டாவில் உள்ள நார்ச்சத்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கிறது.
சப்போட்டாவில் நிறைந்திருக்கும் பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் ஆபத்தைக் குறைக்கிறது.
சப்போட்டா பழத்தில் காணப்படும் வைட்டமின் ஏ மற்றும் இ, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இளமையான தோற்றத்தை தருகிறது.
சப்போட்டாவில் உள்ள இரும்புச்சத்து உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை ஆரோக்கியமாக வைத்து, ரத்தசோகை நோய் வராமல் தடுக்கிறது.
சப்போட்டா பழத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இவை உடலில் வீக்கம் மற்றும் அழற்சி போன்ற பிரச்சினைகளை குணப்படுத்தும் தன்மைகொண்டது.
சப்போட்டாவில் கால்சியம் அதிக அளவில் நிறைந்துள்ளது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சப்போட்டா நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, மற்றும் சி, போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களை கொண்டவை. இது வாய்வழி புற்றுநோய் போன்ற சில வகையான புற்றுநோய்களை தடுக்க உதவலாம்.