ஸ்டார்களை எண்ண முடியாது.. ஸ்ட்ராபெர்ரியின் நன்மைகளை பெற முடியும்...!!
நாம் உட்கொள்ளும் பழம் ருசியாக இருந்தால் மட்டும் போதாது. அதில் நம் உடலுக்குத் தேவையான பலவிதமான அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும். இவ்விரண்டும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் நிறைந்திருக்கின்றன.
ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, ஏ, கே போன்ற வைட்டமின்களும், போலிக் அமிலம், மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும் நிறைந்துள்ளன.