வைட்டமின் "பி12"-ன் பங்கு என்ன?
குழந்தைகளின் மூளை வளர்ச்சியைத் தூண்டுகிறது. மூளை மற்றும் நரம்புகளைச் சுற்றி உள்ள மைலின் உருவாக்கத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது.
அணுக்களில் உள்ள டிஎன்ஏ-வின் உருவாக்கத்திற்கு மற்றும் ஞாபக மறதிநோய் வராமல் தடுப்பதற்கு காரணமாக அமைகிறது.
ரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்திற்கு மற்றும் மனஅழுத்தம், படபடப்பு, மனப்பதற்றம் போன்றவை வராமல் தடுப்பதற்கு உதவுகிறது.
பிறவியில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுக்கிறது. எலும்புகளின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.