கணையம் என்றால் என்ன? கணையத்தை ஏன் பாதுகாக்க வேண்டும்? இதன் பணிதான் என்ன?
ஒரு மனிதன் உயிர்வாழ இதயம், மூளை போன்ற உறுப்புகள் எந்த அளவுக்கு முதன்மையோ அதே அளவுக்குக் கணையமும் முதன்மை வாய்ந்தது.
கணையம் இலைவடிவில் இருக்கும், ஒரு சுரப்பி என்றே சொல்லலாம். வயிற்றின் தொப்புள் பகுதிக்குப் பின்புறத்தில் இருக்கும் இந்த கணையம், டியோடினம் என்று அழைக்கப்படும் சிறுகுடலின் முதல் பிரிவில் இருக்கிறது.
உடலில் ஹார்மோன்கள் மற்றும் உணவு செரிமானத்திற்கான நொதி என்ற திரவத்தைச் சுரக்கச் செய்வது போன்ற பல பணிகளை இந்தக் கணையம் செய்கிறது.
கணையத்தைப் பாதுகாக்கும் வாழ்வியல் வழிமுறைகள்: மது மற்றும் புகைபழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
கொழுப்புச்சத்துக் குறைவான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்
இறைச்சி உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்
இரவில் கால தாமதமாய் உணவு உண்ணுவதைத் தவிர்க்க வேண்டும்
உடல் பருமனாவதைத் தவிர்க்கத் தேவையான வழி முறைகளைப் பின்பற்ற வேண்டும்.