மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது?
அதிகப்படியான வேலை அல்லது வேலை சம்பந்தபட்ட பிரச்சினைகள் காரணமாக ஏற்படலாம்.
திடீர் எதிர்பாராத நிகழ்வுகள், மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
சர்க்கரை நோய், புற்றுநோய், உடல் பருமன் போன்ற உடல்ரீதியான பிரச்சினைகளை சந்திப்பவர்கள் மன அழுத்தத்தை சந்திக்கலாம்.
கடன், நிதி உறுதியற்ற நிலை, நிதிச்சுமை அல்லது நிதிப்பற்றாக்குறை போன்ற காரணங்களால் ஏற்படலாம்.
கடந்தகால அல்லது நிகழ்கால அதிர்ச்சிகரமான விபத்து நிகழ்வுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
குடும்ப பிரச்சினைகள் மற்றும் ஆதரவு இல்லாமை போன்றவை மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
ஆபத்தான வேலை சூழ்நிலைகள் காரணமாக ஏற்படலாம்.
நீண்ட வேலை நேரம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
திருமணம் சார்ந்த பிரச்சினைகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம்.