வெப்பப் பக்கவாதம் என்றால் என்ன?

வெப்பப் பக்கவாதம் என்பது வெப்பத்தினால் ஏற்படக்கூடிய கடுமையான நோய்களில் இதுவும் ஒன்றாகும்.
நம் உடலின் வெப்பநிலை 104 பாரன்ஹீட் அல்லது 40 செல்சியசை தாண்டும் போது, உடலின் குளிரூட்டும் தன்மை செயலிழந்து போகிறது.
இதனால் மூளை வெகுவாகப் பாதிக்கப்பட்டு, தன்நினைவை இழக்க நேரிடும். இதையே வெப்பப் பக்கவாதம் என்கிறோம்.
வெப்பப் பக்கவாதம் எதனால் ஏற்படுகிறது?
வெயில் காலங்களில் போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது.
மதுப்பழக்கம் மற்றும் இறுக்கமான உடை அணிவது.
வெயிலில் அதிகமாக வேலை செய்வது.
வெப்பப் பக்கவாதம் - அறிகுறிகள் என்ன?
உடலின் வெப்பநிலை அதிகமாதல்
மயக்கம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம்
தலைவலி, மனச்சோர்வு மற்றும் மனக்குழப்பம் ஏற்படுதல்
தன்நினைவை இழத்தல்