குழந்தையின்மைக்கு ஆண்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் என்னென்ன?
குழந்தையின்மை பிரச்சினைக்கு ஆண், பெண் இருவருக்குமே சரிசமமான பங்குண்டு.
பெண்களுக்கு 30% பிரச்சினைகள் இருந்தால், ஆண்களுக்கும் அதே 30% பிரச்சினைகள் இருக்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் கருவுறுதல் பிரச்சினை ஆண்களுக்கு அதிகரித்துக்கொண்டே போகிறது என ஆய்வகங்களில் கூறப்படுகிறது..
அதற்கு, புகைப்பழக்கம், வாழ்க்கைமுறை மாற்றம் மற்றும் செல்போன் பயன்பாடு அதிகரிப்பு போன்றவற்றை முக்கிய காரணங்களாக சொல்லலாம்.
இதுதவிர வெளியே சொல்லமுடியாத உடலுறவில் நாட்டமின்மை, விறைப்புத்தன்மை குறைபாடு, வளர்ச்சியடையாத விந்து வெளியேற்றம் போன்ற பிரச்சினைகள் ஆண்களுக்கு இருக்கலலாம்.
எனவேதான் இப்போது சிகிச்சைக்கு வரும்போது தம்பதியர் இருவரும் இணைந்து ஒன்றாக வர மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கருவுறுதலில் பிரச்சினை என்றால் பெண்களுக்கு நிறைய ரத்த பரிசோதனைகள், கருக்குழாய் அடைப்பு பரிசோதனை போன்ற பல டெஸ்ட்கள் இருக்கின்றன.
ஆனால் ஆண்களுக்கு விந்தணு பகுப்பாய்வு என்ற ஒரே பரிசோதனைக்குள் விந்தணுக்களின் எண்ணிக்கை, அதன் இயக்கம், விந்தணு குறைபாட்டுக்கு என்ன பரிசோதனை போன்ற பலவற்றை கண்டறியலாம்.
இப்படி முழுமையான பரிசோதனை செய்யும்போது குழந்தையின்மை பிரச்சினைக்கான காரணத்தை தெளிவாக கண்டறிந்து பரிசோதனை அளிக்கமுடியும்.