நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிமுறைகள்!

நுரையீரல் புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய்க்கு புகைப்பிடித்தல் முக்கிய காரணமாக அமைகிறது. எனவே, புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் நச்சுக் காற்றை சுவாசிக்கும் நபர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
காற்று மாசுபாடு அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்வது நல்லது.
நுரையீரலை வலுப்படுத்தவும், சுவாச செயல்பாட்டை மேம்படுத்தவும், நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி அல்லது நீச்சல் போன்ற வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.
நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் நிறைந்த ஒரு சீரான உணவை உட்கொள்ளவேண்டும்.
நுரையீரல் திறனை அதிகரிக்கவும் ஆக்சிஜன் பரிமாற்றத்தை மேம்படுத்தவும் ஆழ்ந்த சுவாச பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
தேவையான அளவு தண்ணீர் குடித்தால் நுரையீரல் சிறப்பாக செயல்படும்.
சுவாச நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்க, தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது நல்லது.
இருமல், சளி போன்ற பாதிப்புகள் நீண்டநாள் நீடித்தாலோ, நுரையீரல் ஆரோக்கியத்தில் ஏதாவது பின்னடைவு ஏற்பட்டதாக உணர்ந்தாலோ, மருத்துவரிடம் பரிசோதனை செய்து தெளிவு பெறவேண்டும்.