உடல் கட்டுக்கோப்பாக இருக்கணுமா? இந்த உணவை ட்ரை பண்ணி பாருங்க..

பிஸ்தா
பிஸ்தாவில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஏராளம் உள்ளன. இது உடலுக்கு ஆற்றலை வழங்குவதுடன் செரிமானத்திற்கும் உதவிபுரிகின்றன.
பிஸ்தா சாப்பிட்ட பிறகு வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இவை எடை இழப்புக்கு வழிவகுக்கலாம்.
முந்திரி பருப்பு
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முந்திரியில் 70 சதவீதம் மெக்னீசியமும் உள்ளது.
இது உடலில் கொழுப்பு கார்போஹைட்ரேட் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும். இதன் காரணமாக உடல் எடை அதிகரிக்காது.
பாதாம்
பாதாமில் கலோரிகள் மிகக் குறைவு. பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது. ஒரு கைப்பிடி பாதாமில் சுமார் 500 கலோரிகள் உள்ளன.
பாதாம் பருப்புகளை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான புரதம், மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், ஆன்டி ஆக்சிடெண்டுகள் உள்பட பல நன்மைகளைப் பெறலாம். பாதாம் கொலஸ்ட்ராலையும் சீராக்கும்.
வால்நெட்
இதில் உள்ளடங்கி இருக்கும் ஏ.எல்.ஏ. என்னும் என்சைம் உடலில் கெட்ட கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த உதவும். அதே நேரத்தில் செரிமானத்தையும் மேம்படுத்தும்.
வால்நெட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆல்பா-லினோலெனிக் அமிலம் மற்றும் நல்ல கொழுப்பும் நிறைந்துள்ளன. அவை உடலில் கொழுப்பை குறைக்க உதவிபுரியும்.
உலர் திராட்சை
உடல் எடையை குறைப்பதிலும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் உலர் திராட்சைக்கு முக்கிய பங்கு உண்டு.
100 கிராம் உலர் திராட்சையில் ஒரு கிராமுக்கும் குறைவாகவே கொழுப்பு உள்ளது. கலோரிகளும் (295) குறைவுதான்.