கர்ப்ப காலம் சிறப்பானதாக அமைய தேவையான வைட்டமின்கள்..!
கர்ப்பகாலம் முழுக்க ஆரோக்கியமான உணவை எடுத்துகொள்ள வேண்டும். அப்போது தான் பிரசவக்காலமும் ஆரோக்கியமாக இருக்கும்.
போலிக் அமிலம் : போலிக் அமிலம் என்பது வைட்டமின் பி ஆகும். இது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களுக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.
கர்ப்பத்துக்கு முன்பு போலிக் அமிலத்தை எடுத்துகொள்வதால் கருவின் மூளை மற்றும் முதுகெலும்புகள் குறைபாடுகள் நரம்புகுழாய் குறைபாடுகள் போன்றவற்றை தடுக்க உதவும்.
இரும்புச்சத்து : இரும்புச்சத்து, ஹீமோகுளோபின் என்னும் புரதத்தை உருவாக்க உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் வழக்கத்தை காட்டிலும் இரும்புச்சத்து அதிகமாக தேவைப்படும். கர்ப்பிணிக்கு அதிக ரத்த ஓட்டம் உருவாக்க உடலுக்கு இரும்புச்சத்து அதிகம் தேவை.
கால்சியம் : கர்ப்பகாலத்தில் கால்சியம் சத்தும் அவசியம். கால்சியம் குழந்தையின் எலும்புகள், பற்கள், இதயம், தசைகள் மற்றும் நரம்புகளை உருவாக்க உதவும்.
கால்சியத்தை உணவு வழியாகவே பெற்றுவிட முடியும். நாள் ஒன்றுக்கு 1000 மில்லி கிராம் அளவு கால்சியம் தேவை.
வைட்டமின் டி : உடலில் கால்சியம் உறிஞ்ச வேண்டுமென்றால் வைட்டமின்- D சத்து உடலுக்கு தேவை.
வைட்டமின்-D உடலின் நரம்புகள், தசைகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் பணியை மேம்படுத்துகிறது.