வாழைக்காயில் எதிர்ப்புத் திறனான ஸ்டார்ச் உள்ளது. இது செரிமான செயல்முறைக்கு உதவுகிறது.
ரத்த அழுத்தத்தை சீராக பராமரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வாழைக்காயில் காணப்படும் பெக்டின் மற்றும் மாவுச்சத்து ரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சீராக்குகிறது.
ப்ரீ ரேடிக்கல்ஸ் மற்றும் ஆக்ஸிடேடிவ் சேதத்திற்கு எதிராக செயல்பட தேவையான ஆன்டி-ஆக்சைடுகள் நிறைந்துள்ளது.
வாழைக்காயில் காணப்படும் அதிக அளவு மாவுச்சத்து மற்றும் பெக்டின் உடலை கட்டுக்கோப்பாக வைக்கிறது.
புரோபயாடிக் பாக்டீரியாக்கள் குடலுக்கு மிகவும் நல்லது. இந்த புரோபயாடிக் பாக்டீரியாக்கள் வளர்ச்சியை வாழைக்காய் ஊக்குவிக்கிறது.
வாழைக்காயில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது உடலுக்கு நிலையான கார்போஹைட்ரேட்டை வழங்குவதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தப்படும்.
இதில் வைட்டமின் பி 6 மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது ஆரோக்கியமான தலைமுடி மற்றும் சருமத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது.
மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்த வாழைக்காய் பெரிதும் உதவுகிறது.