கர்நாடகாவில் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலாத்தலங்கள்!
மைசூரு: இது ஒரு காலத்தில் மைசூரு புலி என்று அழைக்கப்பட்ட திப்பு சுல்தானின் தலைநகராக இருந்தது. இங்கு பல வரலாற்று தலங்கள் மற்றும் கம்பீரமான அரண்மனைகள் அமைந்துள்ளன
அகும்பே: பசுமையான காடுகள், மின்னும் நீரோடைகள் மற்றும் சிறிய நீர்வீழ்ச்சிகள் ஆகியவை வியப்பில் ஆழ்த்தும். அதிக மழைப்பொழிவு காரணமாக, இது "தென்னிந்தியாவின் சிரபுஞ்சி" என அழைக்கப்படுகிறது
பந்திப்பூர் தேசியப் பூங்கா: கர்நாடகாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் பின்னணியில் அமைந்துள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகம் இந்தியாவின் மிக அழகான தேசிய பூங்காக்களில் ஒன்றாகும்.
குடகு: இந்த மாவட்டத்தின் எல்லையை தொடும்போது சில்லென்ற காற்று நம்மை வருடும். மேலும் இந்த மலையில் தான் காவிரி உற்பத்தியாகிறது.
உடுப்பி: இது கடலோரப் பகுதி என்பதால் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்கிறது. இங்கு உள்ள கிருஷ்ணர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. மேலும் இது கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஜோக் நீர்வீழ்ச்சி: இது இந்தியாவின் இரண்டாவது மிக உயரமான நீர்வீழ்ச்சி ஆகும். ராஜா, ராணி, ரோவர் மற்றும் ராக்கெட் என நான்கு அருவிகளாக சீறி தரைத்தளத்தை எட்டும் காட்சி மெய் சிலிர்க்கவைக்கும்.
ஹம்பி: யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடமாகிய ஹம்பியில் பழங்கால கோவில்கள் மற்றும் அரண்மனைகள் உள்ளன. இது இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.
சிக்கமகளூரு: பாபாபுடன் கிரி, முல்லையன்கிரி மலை, மாணிக்கதாரா அருவி ஆகியவை சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்லும் இடங்களாக உள்ளன.
பெங்களூரு: இங்கு புகழ்பெற்ற லால்பாக், கப்பன் பார்க், மைசூரு மன்னரின் அரண்மனை, விதான் சவுதா ஆகியவை முக்கிய சுற்றுலாத்தலங்களாக அமைந்துள்ளன.