சருமத்தை ஜொலிக்க வைக்கும் தக்காளி..!
இதில் வைட்டமின் A, C , பீட்டா கரோட்டின், சல்பர், குளோரின், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
தக்காளியில் இயற்கையாகவே அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் அதிகமாக உள்ளது. இது சருமத்தில் ஏற்படும் மெல்லிய தடிப்புகள் மற்றும் பிளவுகளை சரிசெய்யும்.
தக்காளியை முகத்தில் தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சரும அழுக்குகள் நீக்கி பருக்கள் மறையும்.
தக்காளியில் சாலிசிலிக் அமிலம் நிறைந்துள்ளதால் அது சருமத்தில் எண்ணெய் பசை உருவாவதை தடுக்கிறது.
தக்காளியில் இருக்கும் லைகோபீன், இறந்த செல்களை அகற்றி சூரியனின் புறஊதாக் கதிர்களால் ஏற்படும் வறட்சியை குறைத்து சருமத்தை ஜொலிக்க செய்யும்.