மேசம்: உற்சாகமான தினமாக இன்று அமையும். வேலை தேடுபவர்கள் போட்டித் தேர்வுகள் மூலம் நினைத்த உத்யோகம் கிடைக்கும். உங்கள் பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது. அரசு சம்பந்தப்பட்ட ஒப்பந்த வேலைகளில் தங்களுக்கே வெற்றி நிச்சயம். நட்பு வட்டம் விரிவடையும்.
ரிசபம்: பெற்றோரின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள். அவர்களின் ஆலோசனையை பரிசீளித்துப் பாருங்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் சில தந்திரங்களை மேற்கொண்டு அதிக லாபத்தை அடைவர். உத்யோகஸ்தர்களை சக ஊழியர்கள் பாராட்டுவர்.
மிதுனம்: பெண்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேசும் போது வாய் நிதானம் தேவை. கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிக்காரர்களிடம் இணக்கமாக செல்வது நல்லது. அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும்.
கடகம்: நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. வீட்டில் வேலையாட்களின் கோபத்தினை காட்டாமல் தட்டிக் கொடுப்பது நல்லது. சமூக ஆர்வலர்கள் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். உடல் நலத்தில் அக்கறை அவசியம்.
சிம்மம்: அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். இரும்பு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களால் நன்மை உண்டு. பணவரவு அதிகரிக்கும். பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர்.
கன்னி: நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். பங்கு சந்தையில் ஈடுபட்டவர்கள் நிலவரத்தை அறிந்து செயல்படுவர். மனைவிவழி உறவினர்களுடன் மீண்டும் இணைவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு தன் கீழ் உள்ள பணியாளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கூடும்.
துலாம்: மனைவியிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். உங்கள் பிள்ளைகள் விளையாட்டுப் போட்டியில் பரிசு பெற்று உங்களுக்கு பெருமையைத் தேடித்தருவர். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட ஊழியர்களுக்கு தகுந்த பாடம் இன்று கிடைக்கும்.
விருச்சிகம்: இன்று சில கசப்பான அனுபவங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள்.காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். பயணத்தின் போதும் சிறுசிறு விபத்துகளை தவிர்க்க கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நல்லது.
தனுசு: அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். தேகம் பொலிவு பெறும். மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள், ஏஜென்சி எடுப்பீர்கள்.
மகரம்: மாணவர்களுக்கு பெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்கும். இளைஞர்களுக்கு திருமண முயற்சிகள் தாமதமாகும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனைவி உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அமைதியை கையாளவும்.
கும்பம்: உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். உடல் பலம் பெறும். பிள்ளைகள் பெற்றோர் சொல்வதை கேட்டு நடந்து கொள்வர். வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்கள் உதவுவர். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள்.
மீனம்: வியாபாரிகளிடம் வியாபார யுக்திகளை கற்றுக் கொள்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலுக்கு நன்கொடை வசூலிப்பீர்கள். தியானம் மேற்கொள்வீர்கள். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் கீழ்படிந்து நடப்பர்.. இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும்.