இன்றைய ராசிபலன் - 20.12.2024!

மேஷம் : நண்பர் உங்களிடம் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வார். குடும்ப பொறுப்பினை உணர்ந்து நடப்பீர். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக கமிசன் கிட்டும். தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதியாளர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும்.
ரிஷபம் : பெரியவர்களின் சந்திப்பு அனுபவத்தை கூட்டும். பழைய கடன் தீரும். நண்பர்களிடையே புரிதல் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு நல்பணி கிட்டும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. மேலதிகாரிகளின் ஆணையை ஏற்று நடப்பீர்கள்.
மிதுனம் : உத்யோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். சேமிப்பை துவங்குவீர்கள். குடும்பத்தில் வாக்குவாதம் வேண்டாம். உடன்பிறப்புகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். மனம் அமைதியைத் தேடும். வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். கலைஞர்கள் பாராட்டினை பெறுவர்.
கடகம் : விவசாயிகளுக்கு உதவி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த சந்தேகம் விலகும். தங்கள் சேமிப்பு உயரும். வியாபாரத்தில் போட்டிகளை பொடியாக்குவீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் பொலிவும் சுறுசுறுப்பும் மிகும். சிலருக்கு காதல் கண்சிமிட்டும்.
சிம்மம் : தம்பதியர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். மாணவர்கள் கூடா நட்பை விலக்குவர். மூத்த சகோதரரால் நன்மை விளையும். மனதில் மகிழ்ச்சி நிலவும். மருத்துவர்கள் சாதனைப் படைப்பர். உத்யோகஸ்தர்களுக்கு கடன் பைசலாகும். நண்பர்கள் விசயத்தில் விட்டுக் கொடுங்கள்.
கன்னி : அலுவலகத்தில் தங்கள் மதிப்பு உயரும். தாங்கள் விரும்பிய துறையில் மிளிருவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வேலையில்லாதவர் விரும்பிய வேலையில் அமர்வர். உங்கள் உடல் நலம் சிறப்படையும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் தேவை.
துலாம்: வியாபாரம் செய்பவர்கள் பொருளாதார நிலையில் திருப்திகரமான முன்னேற்றம் காணப்படும். வரவேண்டிய பாக்கித்தொகைகள் வசூலாகிவிடும். ஆலயங்களுக்குச் சென்று நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் பொறுப்பு ஒரு சிலருக்கு ஏற்படக்கூடும்.
விருச்சிகம் : நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இடமாற்றமும் இப்போது கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வெளிநாட்டிலிருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள்.குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். குடும்ப சொத்து பற்றிய வில்லங்களும் சொத்து பிரிச்சினைகளிலிருந்து தீர்வு கிடைக்கும்.
தனுசு : இன்று பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
மகரம் : புதியவர்களின் அறிமுகம் நன்மையில் முடியும். மாணவர்களின் தேவை பூர்த்தியாகும். எதிர்காலத்திற்கென சேமிக்க துவங்குவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மத்தியில் தங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது.
கும்பம் : கலைஞர்களின் கனவு நனவாகும். வெளி நபர்களிடம் எச்சரிக்கைத் தேவை. பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் கொள்வர். பெண்களுக்கு அறியாமை விலகும். புதிய நட்பால் நன்மை உண்டாகும். பெற்றோரின் நீண்ட நாள் பிரச்சினை விலகும். சிறு தூர பயணம் வெற்றி தரும்.
மீனம் : பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழிலில் பொறுமையுடனும் உறுதியுடனும் இருப்பது நல்லது. இனிமையான சம்பவம் உண்டாகும். காரியம் ஒன்று எளிதில் முடியும். விசா முயற்சிகள் பலிதமாகும். பெற்றோர் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர்.