இன்றைய ராசிபலன் - 16.11.2024

மேஷம்: உத்யோகஸ்தர்களுக்கு நல்ல மாற்றம் ஏற்படும். குடும்பத் தலைவிகளுக்கு தங்கள் மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த சேமிப்பு தொகையை ஆபரணங்களாக வாங்குவர். மாமியார் மாமனார் உறவுகள் மேம்படும். தங்கள் கணவருக்கு தாங்கள் நினைத்த இடத்திலேயே இடமாற்றம் கிடைக்கும். உறவினர்கள் வருகை உண்டு.
ரிஷபம்: எதிர்பார்த்த ஒரு பணத்தொகை வந்து சேரும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மேன்மை உண்டு. இடுப்பு வலி ஏற்பட்டு பின்பு நீங்கும். உத்யோகஸ்தர்களுக்கு உத்தியோக உயர்வு உண்டு. சுயதொழில் செய்பவர்களுக்கு வங்கி கடன் கிடைக்கும். கணவர் விட்டார் ஆதரவு தருவார். ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும்.
மிதுனம்: உத்யோகஸ்தர்களுக்கு அலுவலக வேலையாக வெளியூர் செல்வர். குடும்பத் தலைவிகளுக்கு பண வரவு அதிகரிக்கும். அதற்கேற்ப செலவுகளுக்கும் இடம் உண்டு. பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேரும் காலமாக அமையும். முன் கோபத்தை காட்ட வேண்டாம். பொறுமையை கையாளவும்.
கடகம்: சிறு வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உணவு விஷயத்தில் சற்று கவனம் தேவை. சுய தொழில் செய்யும் பெண்களுக்கு ஒரு சிறு முதலீடுகள் செய்வீர்கள். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.
சிம்மம்: மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அலைச்சல்கள் கூடினாலும் ஆர்டர்கள் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத் தலைவிகளுக்கு தங்களுடைய பிள்ளைகளின் உடல் நலனை பற்றிய கவலைகள் வந்து போகும். திருமண வயதில் இருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
கன்னி: இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
துலாம்: உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து செல்லவும். திருமணமாகாத பெண்களுக்கு தங்கள் உறவிலேயே திருமணம் நடக்கும். தம்பதிகளிடையே அன்பு பலப்படும். மாணவர்களுக்கு படிப்பிலும் மற்றும் விளையாட்டு துறையிலும் மேன்மை அடைவர்.
விருச்சிகம்: மாமனார் வகை உறவினர்கள் வீட்டிற்கு வந்து போவர். வெளியிடத்தில் உணவுகளை உட்கொள்ள வேண்டாம். கூடுமானவரை வீட்டு உணவினை உண்பது நல்லது. தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை தேவை.
தனுசு: நடைபாதை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு அரசு வங்கி கடனில் மானியம் கிடைக்கும். குடும்பத் தலைவிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்யோகஸ்தர்களுக்கு ஊழியர்களின் ஆதரவு கிட்டும். நீண்ட நாள் கனவு நினைவாகும். தங்கள் பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பார்.
மகரம்: உத்யோகஸ்தர்களுக்கு ஓய்வு கிடைக்கும். மாணவர்கள் வீட்டில் செய்யும் படிப்பு வேலைகளை செய்து முடித்துவிடுவீர்கள். தம்பதியிடையே சிறு சிறு வாக்குவாதம் என்றாலும் உடனுக்குடன் சமாதானம் அடைவார். நாத்தனார் தொல்லை இருக்காது.தங்கள் பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவர். உடல் நலன் சீராக இருக்கும்.
கும்பம்: குடும்பத் தலைவிகளுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தங்கள் பிள்ளைகளின் நடத்தையில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். சகோதர சகோதரிகள் உதவி புரிவார். வெளிநாடு கனவு நினைவாகும். உத்யோகஸ்தர்கள் தங்கள் வீட்டாருடன் மால் மற்றும் சினிமாவிற்கு சென்று வருவீர்கள்.
மீனம்: சுய தொழில் செய்யும் பெண்களுக்கு தாங்கள் நினைத்ததற்கு மேலாகவே தங்கள் தொழிலில் லாபம் கிடைக்கும்.யாரிடமும் கடன் வாங்காதீர்கள். எதிர்பார்த்த ஒரு தொகை வந்து சேரும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் தங்கள் திறனை கண்டு பாராட்டுவார். தேக ஆரோக்கியம் மேம்படும்.