இன்றைய ராசிபலன் : 14 .11. 2024

மேஷம் : தம்பதிகள் தாங்கள் எதிர்பார்த்த வண்ணமே தங்கள் குடும்ப செலவிற்கு தக்கப்படி செலவு செய்வர். மாணவர்கள் தாங்கள் எதிர்காலத்தில் எந்த துறையை தேர்ந்தெடுக்கலாம் என்பதைப்பற்றி முடிவெடுப்பர். குடும்பத் தலைவிகளுக்கு தங்கள் பிள்ளை வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவார்.
ரிஷபம் : உணவு விசயத்தில் வீட்டு உணவை உண்பது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு எதிர்பார்த்த வங்கிக்கடன் விரைவில் கிடைக்க வழியுண்டு. தங்கள் கணக்கில் உள்ள சேமிப்புத் தொகை அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும்.
மிதுனம் : வீட்டில் வேலைசெய்பவர்களிடம் தங்கள் குடும்ப விசயத்தை சொல்ல வேண்டாம். சுய தொழில் செய்பவர்களுக்கு வீட்டில் இருந்தபடி செய்யும் தொழிலுக்கு கடன் வசதி கிடைக்கும். மாணவர்கள் பகுதி நேரமாக வேலைக்கு செல்வர். வாகனத்தில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. உடல் நலத்தில் மிகவும் கவனம் தேவை.
கடகம் : உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பெற்றோர்களின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு இருக்கும். மாணவர்கள் நன்கு படிப்பில் ஆர்வம் கொள்வர். வகுப்பில் மற்ற மாணவர்களுடன் முன்கோபம் வேண்டாம்.
சிம்மம் : இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
கன்னி : உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மாமியார் வகை சொந்தங்கள் வீட்டிற்கு வந்து போவர். தம்பதிகளிடையே புரிதல் அதிகரிக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் கை கொடுப்பர். தங்கள் பிள்ளைகளுக்கு உறவுகளிலேயே திருமணம் செட்டாகும்.
துலாம் : வேலை இல்லாதவர்களுக்கு தாங்கள் விரும்பிய வேலை கிடைக்கும். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு அலுவலகத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். குடும்பத் தலைவிகளுக்கு விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவர். தேக ஆரோக்கியம் சிறக்கும்.
விருச்சிகம் : வியாபாரிகளுக்கு தங்கள் முதல்களை வெளியூர்களுக்கு சென்று வாங்கி வருவர். திருமண வயதில் இருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வரன் கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க வராத தங்கள் சகோதர, சகோதரிகள் மீண்டும் இணைந்துவிடுவர்.
தனுசு : உத்யோகஸ்தர்கள் தாங்கள் வெளியிடத்தில் உணவுகளை உட்கொள்ள வேண்டாம். கூடுமானவரை வீட்டு உணவினை உண்பது நல்லது. குடும்பதலைவிகள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவர். அதிக விற்பனைக்காக வியாபாரத்தை துவங்க புது இடத்தை தேர்வு செய்வீர்கள். முதுது வலி ஏற்பட்டு பின்பு நீங்கும்.
மகரம் : உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் உடன் வேலைசெய்யும் சக ஊழியர்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பர். உடல் நலத்தில் கை, கால் வலி வந்து போகும்.பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். குடும்பத் தலைவிகள் தாங்கள் சேர்த்து வைத்துக் கொண்டிருந்த சீட்டுப்பணத்தை எடுப்பர்.
கும்பம் : சுய தொழில் செய்பவர்களுக்கு சென்ற நாட்களை விட அதிக லாபம் கிடைக்கும். தங்கள் பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் கொள்வர். தம்பதியிடையே சிறு சிறு வாக்குவாதம் என்றாலும் உடனுக்குடன் சமாதானம் அடைவார். உத்யோகஸ்தர்களுக்கு போக்குவரத்து சலுகை கிடைக்கும்.
மீனம் : தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலை கொள்வர். மாணவர்கள் தங்களுக்குள் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. சுய தொழில் செய்யும் பெண்களுக்கு தங்கள் பணியை சிறப்பாக செய்வர். கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. பண வரவுக்கு பஞ்சமில்லை.