மேஷம் : தம்பதிகள் ஒற்றுமையுடன் இருப்பர். தேவையில்லாத மனபயம் நீங்கும். காதல் கசக்கும். கலைஞர்களுக்கு வர வேண்டிய பாக்கி தொகை வந்து வரும். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவி புரிவர். உடல் நலம் தேறும்.பிள்ளையால் செலவு ஏற்படும். சிக்கனம் தேவை.
ரிஷபம் : திருமண முயற்சிகள் வெற்றி தரும். பண உதவி கிடைக்கும். வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் அதிகம் கிடைக்கும். அதிக பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். காதலர்கள் தங்கள் பொறுப்பறிவர். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை செலுத்துவர்.
மிதுனம் : ஒரே இடத்தில் நீண்ட காலமாக பணிபுரிந்த உத்யோகஸ்தர்களுக்கு இட மாற்றம் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த காரியம் நடந்தேறும். வசதி குறைவான வீட்டில் இருந்து பெரிய வசதியான வீட்டுக்கு குடிபோக திட்டமிடுவீர்கள்.
கடகம் : யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வீடு, நிலபுலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும். வழக்கு சம்பந்தமாக சற்று விட்டுக் கொடுத்து சமாதானமாக போவது நலம் தரும். பிள்ளை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்,
சிம்மம் : வருமானத்துக்கு வழி பிறக்கும். இளம் பெண்களுக்கு திருமண யோகம் உண்டு. காத்திருந்த இளைஞர்களுக்கு புதிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சில்லரைக்கடை வியாபாரிகள் தங்கள் கடையில் பணப்பொறுப்புக்களை கையாளுபவர்களை கவனிப்பது மிக சிறப்பு.
கன்னி : நீண்ட நாட்களாக கடல் கடந்து செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். எதிர்பார்த்த ஒரு முக்கிய காரியம் தங்கள் எண்ணப்படி நிறைவேறும். கலைத் துறையினருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தேக்க நிலையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும்.
துலாம் : சித்திரை, சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
விருச்சிகம் : உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு குறையும்.மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். தங்கள் தந்தை வழி சொத்தில் உள்ள வில்லங்கள் நீங்கி இரு சாராரும் முடிவெடுப்பீர்கள். இடுப்பு வலி சம்பந்தமாக உபாதைகள் வரவாய்ப்பு உள்ளது. கவனம் தேவை.
தனுசு : இழுபறியாக இருந்த வீட்டு மனை வாங்குவது, விற்பது தொடர்பான விசயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையும். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். யாரிடமும் அதிகமாக பேசுவதை தவிர்ப்பது பல பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள வழிவகுக்கும்.
மகரம் : கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். குடும்பத்துடன் வெளிநாடு சுற்றிப் பார்க்க திட்டமிடுவர். தம்பதிகளுக்கு எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும்.
கும்பம் : மாணவர்களின் எண்ணம் ஈடேறும். தம்பதிகளின் வாழ்வில் வசந்தம் வீசும். கசந்த காதல் இனிக்கும். வெளி நாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஆரோக்கியம் மேம்படும். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.
மீனம் : பெரியவர்களுக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும். அரசியல்வாதிகளுக்கு தங்கள் கட்சித் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். நல்ல பொறுப்பு கிடைக்கும். பெண்களின் திருமண கனவு நிறைவேறும்.