ஆண்டுதோறும் மார்ச் 20-ந்தேதி இன்று(வியாழக்கிழமை) வரை உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இன்று சிட்டுக்குருவிகளை பார்ப்பதே தற்போது அரிதாக உள்ளது. முன்பு கிராமப்புறங்களில் பரவலாக காணப்பட்டன.
தற்போது அவை படிப்படியாக இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு அழிந்து கொண்டே வருகிறது. அழியும் இனத்தில் உள்ள சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வேண்டும்.
உலகில் வாழும் உயிரினங்களுள் மிக முக்கியமான உயிரினம் சிட்டுக்குருவிகள். அது ஒரு காட்டுயிரி என்றாலும் அவை பெரும்பாலும் மனித குடியிருப்புகளை ஒட்டியே வாழும்.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியம்(ஐ.யூ.சி.என்.) கடந்த 2002-ம் ஆண்டு அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் சிட்டுக்குருவியை சேர்த்தது.
செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி காணாமல் போவதாக பரவலாக ஒரு கூற்று உண்டு. ஆனால் உதகையில் செல்போன் கோபுரங்கள் உள்ள பல இடங்களில் சிட்டுக்குருவிகள் வாழ்வதை காணலாம்.
நகரமயமாதல் காரணத்தால் நமது குடியிருப்பு முறை மாறிப்போனதுதான் சிட்டுக்குருவிகள் குறைந்து போக முதன்மையான காரணம்.
ஓட்டு வீடுகளும், குடிசை வீடுகளும் இருந்தவரை அவைகளுக்கு கூடு கட்ட இடம் கிடைத்தன. ஆனால் நாம் கான்கிரீட் வீடுகளுக்கு மாறிய போது சிட்டுக்குருவிகள் இல்லாமல் போனது.
சிட்டுக்குருவிகளின் ஒலியை கேட்பதால் மக்களின் மன அழுத்தம் குறைவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.