காலையில் எழுந்ததும் செய்ய வேண்டியவை..!

காலையில் கண் விழிக்கும்போது உடல் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் கை, கால்களை நன்றாக நீட்டி சோம்பலை முறியுங்கள். இது சுறுசுறுப்புக்கு வித்திடும்.
அதிகாலையில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வதும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட உதவும்.
படுக்கையில் இருந்து காலையில் எழுந்ததும் 2 அல்லது 3 டம்ளர் தண்ணீர் பருகுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அது உடல் உள்உறுப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.
இரவில் சீரகம், வெந்தயம் போன்றவற்றை ஊற வைத்துவிட்டு அதனை காலையில் சாப்பிட்டு வரலாம்.
இரவில் பாதாம் பருப்புகளை ஊறவைத்துவிட்டு காலையில் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
காலையில் தண்ணீர் பருகிய பின் சிறிது நேரம் கழித்து கிரீன் டீ பருகலாம். அதனுடன் பிரெட்டும் சாப்பிடலாம்.
ஒரு டம்ளர் சூடான நீருடன் எலுமிச்சை சாறும், சிறிது தேனும் கலந்து பருகுவது நல்லது.
காலையில் படிப்பது, கடினமான விஷயங்களை யோசிப்பது போன்ற செயல்பாடுகளிலும் ஈடுபடலாம். ஏனெனில் காலைப் பொழுதில் மூளை களைப்பு நீங்கி புத்துணர்ச்சியோடு இருக்கும்.
உடலியல் செயல்பாடுகள் சீராக இருப்பதற்கு காலை உணவையும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவது அவசியம்.