இரவு உணவுக்கு பின் செய்யக்கூடியவை.... செய்யக்கூடாதவை!
பல் துலக்குவது
இரவு உணவு உண்ட உடனேயே பல் துலக்கும் பழக்கமும் பலருக்கும் உண்டு. ஆனால் அது பல்லின் எனாமல் அடுக்கை பாதிக்கும்.
இரவு உணவு உண்ட உடனே பல் துலக்க வேண்டாம். குறைந்தது 30 நிமிடங்களாவது காத்திருந்து பல் துலக்கலாம்.
சாப்பிட்ட உடனே உறங்குவது
சிலர், சாப்பிட்ட உடனே படுக்கையில் சாய்ந்துவிடுவார்கள். அவ்வாறு உடனே உறங்க வேண்டாம்.
இவ்வாறு செய்வதால் செரிமான பாதிப்பு ஏற்படும். வாயு அமிலத்தன்மை அதிகரித்து, உண்ணும் உணவு கொழுப்பாக மாறும். எனவே உடல் எடை கூடும்.
இரவு குளிப்பது : சாப்பிட்ட உடனேயே குளித்தாலும், உடலின் மற்ற பாகங்களுக்குச் செல்லும் ரத்தம் செரிமான மண்டலத்துக்குச் சரியாகப் போவதில்லை. இதனால் செரிமானம் சீராக நடைபெறாது.
டீ, காபி குடிப்பது: இரவு உணவுக்குப் பிறகு உடனடியாக டீ அல்லது காபி குடித்தால்,செரிமானம் பாதிக்கப்படும். வாயு மற்றும் அமிலத்தன்மை பிரச்சினைகள் ஏற்படும். எனவே சாப்பிட்ட உடனேயே காபி, டீ குடிக்க வேண்டாம்.
பழங்கள் சாப்பிடுவது : இரவு உணவு உண்ட உடனேயே பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரவு உணவுக்குப் பிறகு பழங்களைச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகாது.
தண்ணீர் குடிப்பது : நம் உடலுக்கு தண்ணீர் தேவை. ஆனால் அதை சரியான நேரத்தில் குடிக்க வேண்டும். குறிப்பாக இரவு உணவுக்குப் பிறகு தண்ணீர் பருக வேண்டாம். குறைந்தது 30 முதல் 60 நிமிடங்கள் காத்திருக்கவும்.
நடப்பது : சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி செய்வதால் கை, கால்களுக்கு ரத்தம் செல்லும். இது செரிமானத்தில் குறுக்கிடுகிறது. சாப்பிட்ட உடனே நடக்க வேண்டாம். ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் கழித்து நடக்கலாம்.