கிரிக்கெட் வீரர் அஸ்வின் கடந்து வந்த பாதை..!

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான அஸ்வின் கடந்த 1986-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி சென்னையில் பிறந்தார்.
அஸ்வின், தனது பள்ளி தோழியான பிரித்தி நாராயணனை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு அகிரா மற்றும் ஆத்யா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர் முதன் முதலில் 2006-ல் தமிழக அணிக்காக விளையாட துவங்கி சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தினார். தமிழக அணி வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2009 ஐ.பி.எல் போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டார். சென்னை அணிக்காக 2010 சாம்பியன்ஸ் லீக்கில் தொடர் நாயகன் விருது வென்று அசத்திய அஸ்வின் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார்.
அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2010-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார்.
2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற தொடரில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆன அஸ்வின் முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார்.
இவர் இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 765 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.
2024-ம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணிக்காக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.