2024-ல் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடிய சுற்றுலாத்தலங்கள்!
10. தெற்கு கோவா: இளைஞர்களின் கனவு தேசமான கோவா இந்தியாவில் இருந்தாலும் வெளிநாட்டில் இருப்பது போன்ற அனுபவத்தை கொடுக்கிறது. இங்குள்ள அழகிய கடற்கரைகள் சுற்றுலா பயணிகள் அனைவராலும் விரும்பக்கூடிய இடமாக திகழ்கிறது.
9. காஷ்மீர்: வெள்ளைப் போர்வை கொண்டு போர்த்தியது போல் காணும் இடம் எல்லாம் பனி சூழ்ந்து காணப்படும். மேலும் இங்கு ரம்மியமான சூழல் நிலவுவதால் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றன.
8. அயோத்தி: ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு அக்கோவிலை பார்க்க லட்சக்கணக்கான மக்கள் அயோத்திக்கு சென்று வருகின்றனர். அதன் விளைவாக இப்பட்டியலில் அயோத்தி இடம் பிடித்துள்ளது
7. மலேசியா: அமைதியான கடற்கரைகள், இரவு வாழ்க்கை, தனித்துவமான கலாச்சாரம், சுவையான உணவு வகைகள் ஆகியவற்றிற்கு பெயர்பெற்றது. இங்குள்ள புகழ்பெற்ற முருகன் கோவில் இந்திய சுற்றுலா பயணிகள் அனைவரும் பார்க்க கூடிய இடமாக அமைத்துள்ளது.
6. ஜார்ஜியா: இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் பனிச்சறுக்கு ஆகியவை இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றது. இங்குள்ள பனிமலை பிரதேசத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
5. ஜெய்ப்பூர்: இந்தியாவின் இளஞ்சிவப்பு நகரம் என்று இது அழைக்கப்படுகிறது. திரும்பிய திசையெங்கும் கலை நயமுடன் மன்னர்கள் கால கட்டமைப்புகளை பொலிவு மாறாமல் காண முடியும்.
4. கஜகஸ்தான்: வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கு கஜகஸ்தான் பெயர்பெற்றது. அழகிய மலைகள் மற்றும் முடிவில்லா புல்வெளிகள், பரந்த பாலைவனங்கள் ஆகியவை அனைவரையும் பிரமிக்க வைக்கும்.
3. மணாலி: இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த மணாலி சாகச விரும்பிகள் மற்றும் இளைஞர்களுக்கு பிரியமான இடமாக உள்ளது. பனி மூடிய சிகரங்கள், இயற்கை எழில் கொஞ்சும் பள்ளத்தாக்குகள் ஆகியவை காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.
2. பாலி: இந்தோனேசியாவின் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான 'பாலி' இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியர்கள் பலரும் தேனிலவுக்கு செல்லும் முக்கிய சுற்றுலாத் தலமாக 'பாலி' உள்ளது குறிப்பிடத்தக்கது.
1. அஜர்பைஜான்: இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட சுற்றுலாத்தலங்களில் அஜர்பைஜான் முதலிடத்தில் உள்ளது. அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. இந்நிலையில் அஜர்பைஜான் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது.