அன்று முதல் இன்று வரை ஜொலிக்கும் கிறிஸ்துமஸ் மரத்தின் வரலாறு..!
கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக, கிறிஸ்துமஸ் மரம் மாறிவிட்டது. கிறிஸ்துமஸ் மரத்தின் வரலாறு மிகவும் சுவையானது.
ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த போனிபேஸ் என்பவர், கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பல மூடநம்பிக்கைகள் இருந்ததாக எதிர்த்து வந்தார்.
ஊர் ஊராகச் சென்று இதற்காக பிரச்சாரம் செய்துவந்த அவர், ஓக் மரம் ஒன்றை மக்கள் வழிபடுவதைக் கண்டார். அச்செயலைக் கண்டு கடுங்கோபம் கொண்ட அவர், அந்த மரத்தை வெட்டி வீழ்த்தினார்.
அவர் வெட்டிய மரம் மீண்டும் துளிர்த்து விடாமல் இருக்க அந்த மரத்தின் வேர்ப்பகுதியையும் அங்கிருந்து பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தினார்.
ஆனால் மரம் இருந்த அதே இடத்திலிருந்து அடுத்த சில நாட்களிலேயே ஓக் மரக்கன்று முளைத்து விறுவிறுவென்று முன்பிருந்த மரத்தைப்போலவே கம்பீரமாக வளர்ந்துள்ளது.
இந்த மரம் விறுவிறுவென்று வளர்ந்ததை கண்ட மக்கள், அதை இயேசு உயிருடன் மீண்டெழுந்த உயிர்த்தெழுதலின் அடையாளமாக பார்க்கத் தொடங்கினர்.
ஒரு நாள் பிரச்சாரம் முடிந்து அவ்வழியே சென்ற போனிபேஸ் தாம் வெட்டிப்போட்ட இடத்தில் புதிய மரத்தைக் கண்டு வியந்து அதனடியில் முழங்காலிட்டு ஜெபிக்கத் தொடங்கினார்.
அன்றிலிருந்து கிறிஸ்தவ வழிபாட்டில் பத்தாம் நூற்றாண்டில் ஓக் மரம் ‘உயிர்ப்பின் அடையாளமாக’ இடம்பெறத் தொடங்கியது.
அன்று முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையில் முக்கிய அங்கமாக மாறி விட்டதாகவும், இதனால் ஜெர்மனியே கிறிஸ்துமஸ் மரத்தின் பிறப்பிடம் என்றும் சொல்லப்படுகிறது.