சீன பெருஞ்சுவருக்கு டப் கொடுக்கும் இந்திய பெருஞ்சுவர்!
உலக அதிசயங்களுள் ஒன்றாக கருதப்படும் சீனப்பெருஞ்சுவரை விண்வெளியில் இருந்து பார்த்தாலும் துல்லியமாகத் தெரியும்.
இத்தகைய சிறப்புமிக்க பெருஞ்சுவர், சீனாவில் மட்டுமல்ல நம் இந்தியாவிலும் இருக்கிறது. அதுதான் ராஜஸ்தான் மாநிலத்தில், ஆரவல்லி மலைப்பகுதியில் கொஞ்சம் சிறியதாக இருக்கிறது.
மகாராணா கும்பா என்பவர், தமது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளைக் காப்பதற்காக கட்டப்பட்டதாகும். இந்த சுவரின் நீளம் 36 கி.மீ., அகலம் 6 மீட்டர் ஆகும்.
மலை பகுதியில் அமைந்திருப்பதால் சுற்றிலும் அழகான இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே செல்லலாம். யுனஸ்கோவின் பட்டியலிலும் இந்த சுவர் இடம் பெற்றிருக்கிறது.
கும்பல்கர்க் கோட்டை ஆச்சரியப்பட வைக்கும் பல கட்டமைப்புகளை கொண்டது. கோட்டைக்குள் நுழைவதற்கு 7 நுழைவாயில்கள் உள்ளன. கோட்டையின் மேற்புறத்தில் இருந்து பார்த்தால் ஆரவல்லி மலைத்தொடர் தெரியும்.
இந்த கோட்டையானது நாலாபுறமும் உயரமான சுவரால் சூழப்பட்டிருக்கிறது. 'கிரேட் வால் ஆப் சைனா' என்று அழைக்கப்படும் சீனப்பெருஞ்சுவருக்கு அடுத்துள்ள நீளமான சுவர் ஆகும்.
இந்த கோட்டையினுள் 300 இந்து கோவில்களும், 60 ஜெயின் கோவில்களும் அமைந்துள்ளன. அவற்றுள் ரானாக்பூர் ஜெயின் கோவில் சலவைக்கற்களால் கட்டப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இந்த இந்தியப்பெருஞ்சுவரைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். ஆரவல்லி மலையின் மீது ஆயிரத்து 600 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த பெருஞ்சுவர், இந்திய அதிசயங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.