மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஸ்டிரெஸ் பால்!

உள்ளங்கையில் ஸ்டிரெஸ் பாலை வைத்து, முடிந்த வரை கடினமாக அழுத்தியபடி 5 வினாடிகள் வைத்திருந்த பின்பு மெதுவாக கைகளை தளர்த்தவும்.
இதுபோல தொடர்ந்து 10 முறை செய்யலாம். ஒரு நிமிட இடைவெளிக்குப் பின்பு மற்றொரு கையிலும் இதேபோல் செய்ய வேண்டும்.
ஸ்டிரெஸ் பாலை அழுத்தும்போது கையில் இருக்கும் நரம்புகள் தூண்டப்படும். மூளையில் ஏற்படும் உணர்ச்சிகளுடன் தொடர்புடைய நரம்புகள் உள்ளங்கைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
அவை தூண்டப்படுவதால், மூளையில் உள்ள உணர்ச்சிகளுக்கான பகுதியில் அமைதிக்கான தூண்டுதல் ஏற்படும். இந்த சமிக்கை உடல் முழுவதும் அனுப்பப்படும்.
பதற்றமாக இருக்கும் சமயங்களில், கைகளில் ஸ்டிரெஸ் பாலை வைத்து அழுத்தும்போது, தன்னிச்சையாகவே நம்முடைய கவனம் திசை திருப்பப்படும்.
ஸ்டிரெஸ் பாலை தொடர்ந்து அழுத்தும்போது, அது உள்ளங்கைப் பகுதியை மட்டுமில்லாமல், முழு கையின் தசைகளையும் இறுக்கமாக்கும். சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுப்பதோடு, ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் பிற கழிவுப் பொருட்களையும் வெளியேற்றும்.
மேலும், மூளையில் உள்ள நரம்புகள் தொடர்ந்து தூண்டப்படுவதால் 'எண்டோர்பின்' ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியை உணர வைக்கும் இந்த ஹார்மோன், வலி நிவாரணியாகவும் செயல்படும்.
மன அழுத்தம் உடையவர்கள், அடிக்கடி கோபம் வரும் குணாதிசயம் கொண்டவர்கள், எளிதில் பதற்றம் அடைபவர்கள் உள்பட அனைத்து வயதினரும் ஸ்டிரெஸ் பாலை பயன்படுத்தலாம்.
கையில் எலும்பு முறிவு, தசைநார் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஸ்டிரெஸ் பாலை பயன்படுத்தலாம்.