உப்புக் கடல், இறந்த கடல் உள்பட பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த சாக்கடல் இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் நாடுகளின் நடுவே அமைந்துள்ளது.
இந்தக் கடலில் உயிரினங்கள் எதுவும் வாழ முடியாததால், இது இறந்த கடல், சாக்கடல் என்று அழைக்கப்படுகிறது.
377 மீட்டர் ஆழமுடைய இந்த கடலை சுற்றி நிலப்பரப்புகள்தான் ஆக்கிரமித்திருக்கின்றன. ஆனாலும் உவர் நீர் என்பதால் கடல் நீரை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் உப்புத் தன்மை கொண்டிருக்கிறது.
சாதாரணமாக ஒரு லிட்டர் கடல் நீரை காய்ச்சும்போது 35 கிராம் உப்பு கிடைக்கும். ஆனால், சாக்கடலின் ஒரு லிட்டர் நீரை காய்ச்சினால் 340 கிராம் உப்பு கிடைக்கும்.
இந்த சாக்கடல் 67 கி.மீ நீளமும், 18 கி.மீ அகலமும் உடையது. அதிகளவு உவர்ப்புத் தன்மை யுடைய இந்த நீரில் மீன்களோ, பிற தாவரங்களோ வாழ முடியாவிட்டாலும் மிகச் சிறிய அளவி லான நுண்ணுயிரிகள் வசிக்கின்றன.
மழைக்காலத்தில் உப்புத் தன்மை சற்று குறைவதால் குறு கிய காலத்திற்கு மட்டும் உயிரினங்கள் வாழும்.
இந்த கடலில் நீச்சல் தெரியாத மனிதன் கூட இங்கு இறங்கி விளையாடலாம். இதில் உள்ள அதிக உவர்ப்புத்தன்மையின் காரணமாக மனிதன் நீரின் உள்ளே மூழ்கும் அபாயம் இல்லை.
அதனால் மனிதர்கள் விரும்பி செல்லும் ஒரு புகழ்பெற்ற இடமாக திகழ்கிறது. சாக்கடலில் உற்சாகமாக விளையாடியும், நீரில் மிதந்தும் பலரும் பொழுதை கழிக்கிறார்கள்.