சியா விதை தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
சியா விதையில் அதிகப்படியான நார்ச்சத்து, புரதச்சத்து மற்றும் , ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன.
நம் உடலில் இருக்கும் நார்ச்சத்து அளவை அதிகரிக்க சியா விதைகளை உட்கொள்ளலாம்.
சியா விதைகளில் 'ஒமேகா 3' கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சியா விதை தண்ணீரில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளன. இது காலை முழுவதும் நமது உடலுக்கு நீடித்த ஆற்றலை வழங்குகிறது.
சியா விதை தண்ணீர் குடிப்பதால், புற்றுநோய், அபாயத்திலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
சியா விதை உடலுக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களை வழங்குகின்றன.
இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும், குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சியா விதைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான எடை இழப்புக்கு உதவுகின்றன.
சியா விதை நீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் மலச்சிக்கலைத் தடுத்து, குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது.