குழந்தைகள் அதிகம் எதிர்கொள்ளும் மலச்சிக்கலைத் தீர்க்க எளிய வழிகள்..!
பொதுவாகவே ஒரு வயதுக்கு கீழ் தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தைகளுக்கு மலம் கழிப்பதில் பெரிதாக சிக்கல் ஏற்படுவதில்லை.
பசும்பால், பாக்கெட் பால் மற்றும் இதர உணவுகளைக் குழந்தைச் சாப்பிட தொடங்கியவுடன்தான் மலச்சிக்கல் ஆரம்பமாகிறது.
ஆரம்பத்தில் இருந்தே மலச்சிக்கலை சரிப்படுத்த நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த உணவுகளை சரியான விகிதத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
மலச்சிக்கல் பிரச்சினையை தடுக்கும் வழிமுறைகள்: கேரட், முருங்கைக்காய், தினம் ஒரு கீரை வகைகளோடு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துள்ள காய்கறிகளை கொடுத்து வரலாம்.
வாழைப்பழம் சிறந்த மலமிலக்கியாக செயல்படும். வாழைப்பழத்தை குழந்தைகளுக்கு பாலுடன் சேர்த்து தரலாம். குழந்தைகளின் மலச்சிக்கலைத் தீர்க்க மலை வாழைப்பழம் சிறந்த தேர்வாகும்.
இரவு ஊறவைத்த உலர் திராட்சைகளைக் காலை மற்றும் மாலையில் குழந்தைகளுக்கு மசித்து கொடுக்கலாம்.
பேரீச்சை, அத்திப்பழம் ஆகியவற்றைத் தண்ணீரில் ஊறவைத்து காலையில் நன்கு மசித்துக் கொடுத்து வரலாம்.
அரிசி உணவை மட்டுமே கொடுக்காமல் உணவில் சிறுதானியங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மைதாவால் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் துரித உணவுகளைக் கட்டாயமாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.
குழந்தைகள் தண்ணீர் குடிக்க மறந்தாலும்கூட தேவையான தண்ணீரைக் குடிக்க பழக்க வேண்டியது அவசியம். எந்த உணவாக இருந்தாலும் குழந்தைகளுக்கு மசித்து கொடுப்பது நல்லது.