இதில் அதிக அளவு உயிர்ச்சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என அளப்பரிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என சுகாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதில் டெஸ்டோஸ்டிரோன் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கு அவசியமான துத்தநாகம் நிறைந்துள்ளன. துத்தநாகம் புரோஸ்டேட் ஆரோக்கியத்திற்கு உதவும். மேலும் உடல் ஆற்றலை வலுப்படுத்தும்.
இதில் லுடீன் மற்றும் பீட்டா கரோட்டினாய்டுகள் நிறைந்திருப்பதால் இது வயது தொடர்பான மாகுலர் சிதைவு போன்ற கண் பிரச்சினையை குறைக்கக்கூடும்.
செவ்வாழைப் பழத்தில் வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் இருக்கின்றன. இது தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
செவ்வாழையில் வைட்டமின் பி6 இருப்பது, ரத்த சிவப்பணு உருவாக்கத்திற்கு உதவும். இது ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த சோகை அபாயத்தை குறைக்கும்.
செவ்வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது.
செவ்வாழைப்பழத்தில் குறைவான கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன. இது உடல் எடையை குறைப்பதற்கு துணைபுரிகிறது.
செவ்வாழைப்பழத்தில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது விந்தணு எண்ணிக்கையை அதிகரித்து, மலட்டு தன்மையை போக்குகிறது.