சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் சி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
சிவப்பு அவல் உடலில் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி, புற்றுநோய் அபாயத்தை தடுக்க வழிவகுக்கிறது.
ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையே அதிகரிக்க செய்து, ரத்த சோகை பிரச்சினையை தடுக்கிறது.
இது குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவாகும். எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்து விளங்குகிறது.
இதில் இருக்கும் நார்ச்சத்து, உடலில் உள்ள கொழுப்பை கரைத்து ஆரோக்கியமான உடல் எடைக்கு வழிவகுக்கும்.
இது புரோபயாடிக் நன்மைகளை கொண்டுள்ளது. இவை நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன, இதன் மூலம் இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
சிவப்பு அவலில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
இது கெட்ட கொழுப்பை கரைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதில் மக்னீசியம் நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தும் தன்மைகொண்டது.