வைட்டமின் டி குறைபாடு காரணமாக ஏற்படும் பிரச்சினைகள்!

சிலர் எப்போதும் உடம்பெல்லாம் வலிப்பதாக கூறுவார்கள். எலும்புகளும் வலுவிழந்தது போன்ற உணர்வு ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் அதற்கான தீர்வுகளை கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.
எலும்புகள் ஸ்ட்ராங்காக இல்லை என்றாலே, வைட்டமின் டி சத்துக் குறைபாடு இருக்க அதிக வாய்ப்புண்டு. இந்த டி சத்து, நமது உடலிலுள்ள எலும்புகளுக்கு மிக உறுதியையும், மிகுந்த பலத்தையும் கொடுக்க மிகமிக உதவியாய் இருக்கிறது.
உடலின் பலத்துக்கு கால்சியமும், பாஸ்பரஸ்சும் மிகமிக முக்கியம். இந்த இரண்டையும் உணவிலிருந்து உறிஞ்சி, இழுத்தெடுத்து, உடலில் சேகரித்து வைக்க வைட்டமின் டி மிகமிக உபயோகமாக இருக்கிறது.
உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இல்லையென்றால், உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்ஸின் அளவும் குறைந்துவிடும். இதனால் , உடல் எலும்புகள் உறுதியாக இல்லாமல் , நனைந்து போன பேப்பரைப் போல் எலும்புகள் உடைந்துவிடும்.
வைட்டமின் டி குறைபாட்டினால் எலும்பில் ஏற்படும் இந்த நோய்க்கு ஆஸ்டியோபோரோஸிஸ் அதாவது எலும்புப் புரை என்று சொல்லப்படுகின்றது.
இந்த நோய் ஏற்படாமலிருக்க வைட்டமின் டி-யுடன் கால்சியமும் சேர்ந்து, எலும்பைப் பாதுகாக்கிறது. மேலும் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க, தசை இறுக்கம், தசைப்பிடிப்பு ஏற்படாமலிருக்க உதவி செய்கிறது.
தீராத வயிற்றுப் பிரச்சினை உள்ளவர்களுக்கு உணவின் மூலம் கிடைக்கும் வைட்டமின் டி-யை நன்கு உறிஞ்ச வாய்ப்பில்லை. கல்லீரல், சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்களுக்கு, வைட்டமின் டி உறிஞ்ச அதிக வாய்ப்பில்லை.
குழந்தைகளுக்கு வைட்டமின் டி பற்றாக்குறை, ச்ரிக்கெட்ஸ்ஞ் என்கிற நோயை உண்டு பண்ணுகிறது. இது இந்தியாவை, மற்ற நாடுகளில் அதிகம்.
சோயா பால், பாதாம் பால் , ஓட்ஸ் கஞ்சி, முட்டை மஞ்சள் கரு, பாலாடைக்கட்டி, காளான்கள், ஆரஞ்சுப் பழச்சாறு போன்ற வைட்டமின் டி சத்து அதிகமுள்ள உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்வது சிறந்த பலனை தரும்.