கம்ப்யூட்டரை அதிக நேரம் உபயோகிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்!
கம்ப்யூட்டரை அதிக நேரம் உபயோகிப்பதால் ஏற்படும் கண் பிரச்சினைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் என அழைக்கப்படுகிறது.
தினமும் 3-4 மணி நேரத்திற்கு மேல் கணினி உபயோகிப்பவர்களில் 75 சதவீதத்தினருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த பாதிப்பு உள்ளவர்களிடம் காணப்படும் முக்கிய அறிகுறிகள் கண் சோர்வு, கண் வலி, தலைவலி, கண் எரிச்சல், கண் நீர் வடிதல் மற்றும் பார்வை கோளாறு போன்றவை ஆகும்.
இதற்கு முக்கியமான காரணம், கம்ப்யூட்டர் மற்றும் அருகில் உள்ள விளக்குகளில் இருந்து ஏற்படும் ஒளி சிதறல்கள், கண் சிமிட்டாமல் மானிட்டரை பார்ப்பது, மற்றும் சரியான கண்ணாடி அணியாமல் வேலை செய்வது போன்றவை ஆகும்.
கண் பாதிப்பை தடுக்கும் வழிமுறைகள்:
கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் திரை, உங்கள் கண்களில் இருந்து உங்கள் கையின் நீளம் உள்ள தூரத்தில் வைக்கப்பட வேண்டும்.
கம்ப்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்பவர்கள் 20 நிமிடத்திற்கு ஒரு முறை 20 வினாடிகளுக்கு 20 அடிக்கு மேலான தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும்.
மின் விளக்குகள் மற்றும் ஜன்னல்கள் கண்களுக்கு எதிராக இருப்பதை தவிர்க்க வேண்டும். ஏசி காற்று நேராக முகத்தில் அல்லது கண்களில் படும் படியாக அமரக்கூடாது
நீங்கள் வெயிலில் அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் புறஊதாக் கதிர் பாதுகாப்பு சன்கிளாஸ்களை பயன்படுத்தலாம்.
வெளியே சென்றுவிட்டு வந்ததும் முகம், கை, கால்களை சுத்தம் செய்யவேண்டும். முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு, தூசி, துகள் போன்றவை கண்களில் படுவதற்கு முன்னர் கழுவி விட வேண்டும்.