உடலில் ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் பிரணாயாமம் செய்தால் போதும்...!
நம்முடைய மூதாதையர்கள் கையாண்ட பழமையான பயிற்சிகளுள் முக்கியமானது, பிரணாயாமம். ஆழ்ந்து சுவாசித்து மூச்சை உள் இழுத்து வெளியிடும் இந்த பயிற்சியானது யோகாவின் ஒரு அங்கமாக விளங்குகிறது.
மன அழுத்தம் - பதற்றத்தை குறைக்கும் : பிரணாயாமம் பயிற்சி மூலம் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது மனதை அமைதிப்படுத்தும் திறனாகும். இந்த ஆழ்ந்த சுவாச முறை மன அழுத்தத்தை குறைக்கும். பதற்றத்தையும் தணிக்கும்.
செரிமான பிரச்சினையை போக்கும் : இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளை போக்கவும் உதவும்.
ரத்த அழுத்தத்தை சீராக்கும் : பிரணாயாமம் பயிற்சி நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத்துடிப்பு சீராக நடைபெற ஊக்குவிக்கும்.
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் : இந்த பயிற்சியானது சுவாச முறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம், இதய நோய் ஏற்படும் அபாயத்தை வெகுவாக குறைந்துவிடும்.
மன தெளிவை கொடுக்கும் : பிரணாயாமம் பயிற்சி செய்வதன் மூலம் கவனச்சிதறல்கள் கட்டுப்படும். கூர்ந்து கவனிக்கும் திறன் அதிகரிக்கும். மனமும் தெளிவு பெறும்.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் : மனதை அமைதிப்படுத்துவதன் மூலமும், எதிர்மறை உணர்ச்சிகளை குறைப்பதன் மூலமும் ஆழ் மன நலனை பேணுவதற்கு வித்திடும்.
நுரையீரல் செயல் திறனை மேம்படுத்தும் : பிரணாயாமம் பயிற்சி செய்வதன் மூலம் சுவாச மண்டலத்தை பலப்படுத்தி நுரையீரலின் செயல் திறனை அதிகரிக்க செய்யும்.
ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் : இந்த பயிற்சி உடலில் உள்ள ஹார்மோன்களை ஒழுங்குபடுத்த உதவிடும். குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பி.சி.ஓ.எஸ். எனப்படும் ஹார்மோன் சமநிலை பிரச்சினையை ஒழுங்குபடுத்தும்.