பொங்கல் ஸ்பெஷல் சர்க்கரை பொங்கல்..!
தேவையான பொருட்கள்: பச்சரிசி, வெல்லம், துருவிய தேங்காய், முந்திரி, உலர்ந்த திராட்சை, நெய், ஏலக்காய் பொடி, பச்சை கற்பூரம் ஆகியவை.
முதலில் அரிசியை நன்றாக கழுவிய பின்னர் நிறைய தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றாக குழைந்து வெந்த பின்னர் சாதத்தை வடிக்காமல் சல்லடை கரண்டியால் வேகவைத்த தண்ணீரை இறுத்துக் கொள்ளுங்கள்.
அதன்பின் சாதத்தை சிறிது நேரம் அடுப்பில் மிதமான தீயில் வைத்து கரண்டியால் மசித்து விட வேண்டும்.
அதன்பின்னர் வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டி அதை சாதத்தில் சேர்த்து நன்றாக கலக்குங்கள்.
சாதமும் வெல்லமும் நன்றாக கலக்கும் வரை கிளறிக் கொள்ளுங்கள். நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இரக்கலாம்.
ஒரு கடாயில் நெய்யை ஊற்றி சூடானதும், துருவிய தேங்காய், முந்திரி, உலர் திராட்சையை நன்றாக வறுத்து பொன்நிறமானதும் அதை பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறுங்கள்.
அதன்பின் ஏலக்காய் மற்றும் பச்சை கற்பூரம் பொடியை தேவையான அளவு சேர்த்து கிளறி பரிமாறிக்கொள்ளலாம்.