வாய் வழி புற்றுநோயானது தொண்டைக்குள் உள்ளே இருக்கும் செல் அணுக்களில் காணப்படும் வீரியமிக்க நோய் தொற்று அல்லது புற்றுநோய் செல்கள் காரணமாக ஏற்படும் நோயாகும்.
இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் இருப்பின் உயிர்க்கு ஆபத்தானதாகும். வாய் வழி புற்றுநோய் அறிகுறிகள் பெரும்பாலும் முதிர்ந்த நிலையில் குறிப்பாக நோய் பரவும் நிலையிலேயே கண்டறியப்படுகின்றன.
வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிற தொற்றுகள் 3 வாரங்களுக்கு மேல் தொண்டையில் இருப்பது.
தொண்டை வறட்சியான நிலை ஒரு மாதங்களுக்கு மேல் நீடிப்பது.
வாய், தொண்டையில் புண் 3-ல் இருந்து 4 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து ஆறாமல் இருப்பது.
தொண்டையில் கட்டி அல்லது வாயினுள் கட்டி போன்ற அமைப்பு காணப்படுவது.
காரணம் இன்றி பற்கள் வலுவிழந்து விழுவது மற்றும் பேசுவதில் சிரமம்.
தொடர் தொண்டை வலியினால் உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்படுவது.
உதடு, தொண்டை, நாக்கு, காது, கழுத்து பகுதியில் வலி காணப்படுதல்.
இதில் குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகவும்.