நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமண சடங்கு புகைப்படங்கள்..!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா.
தமிழில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சோபிதா துலிபாலா.
கடந்த ஆகஸ்ட் மாதம் நாக சைதன்யாவுக்கு நடிகை சோபிதா துலிபாலாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்தநிலையில், நடிகை சோபிதா துலிபாலா இன்று தன் வீட்டில் திருமணத்திற்கான சடங்குகள் செய்துள்ளார்.
இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.