கண்டிப்பாக தெரிய வேண்டியவை...விண்வெளியும், வியக்க வைக்கும் தகவல்களும்..!

நிலநடுக்கோட்டுப் பகுதியில் பருவ கால மாற்றமே கிடையாது. ஆண்டு முழுவதும் ஒரே வெப்பம் வெப்பம் வெப்பமே!
சூரியனைச் சுற்றி வரும் பூமியின் வேகம் நிலையாக இருப்பதில்லை. அதன் சுற்றுப்பாதையின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வேகம்!
சூரிய மண்டலத்தின் மிகச் சிறிய நிலவு, செவ்வாயிலுள்ள டைமோஸ். இதன் குறுக்களவு 13 கிலோமீட்டரை விடக் குறைவுதான். சில மணி நேரங்களில் நடந்தே கடந்து விடலாம்!
கருங்கடல், மஞ்சள் கடல், செங்கடல், வெண் கடல் என்ற பெயர்களில் இருந்தாலும், இவை அனைத்தும் மற்ற கடல்களைப் போல நீலம் அல்லது நீலப்பச்சையாகவே காட்சியளிக்கின்றன!
ஒரே ஒரு சூரியப்புள்ளி (சன்ஸ்பாட்) மட்டுமே 3 லட்சம் கிலோமீட்டர் நீளம் வரை இருக்கும்!
ஒவ்வொரு நாளும் சுமார் 7.5 கோடி எரிகற்கள் நமது வளிமண்டலத்துக்குள் நுழைகின்றன. ஆனால், ஒன்றோ, இரண்டோ மட்டும்தான் தரையை அடைகின்றன.
பல்சார் என்ற துடிப்பு விண்மீன்கள் வானில் சுழலும் வேகம் மிக அதிகம். பொதுவாக ஒரு வினாடிக்குள்ளாகவே அவை சுழன்று முடித்து விடும். அதிவேகம் கொண்ட ஒரு பல்சார், ஒவ்வொரு வினாடியும் 200 முறை சுழலும்!
சந்திர கிரகணம் 104 நிமிடங்களைத் தாண்டி நீடிப்பதில்லை!