காலையில் செய்ய வேண்டிய பழக்க வழக்கங்கள்!

இது ஸ்மார்ட்போன் யுகம். இரவில் தூங்க செல்லும்போதும், காலையில் எழுந்த உடனேயும் செல்போனில் நேரத்தை செலவிடுபவர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சமூக ஊடகங்களின் தாக்கம் வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கமாகிவிட்டது என்றாலும் எழுந்ததும் காலை வேளையில் அதனை தவிர்ப்பது அமைதியான சூழலுக்கு வழிவகை செய்யும்.
காலை எழுந்ததும் சில நிமிடங்களை உங்களுக்காக செலவிடுவது மன உறுதிக்கு பயனுள்ளதாக இருக்கும். மனதுக்குப்பிடித்தமான இசையை கேட்பது மனதை அமைதிப்படுத்தும்.
அலுவலகத்திற்கு செல்ல நேரமாகி விட்டதே என்று அவசர அவசரமாக குளிக்கக்கூடாது. குளிப்பதற்கென்றே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அதனை சரிவர பின்பற்ற வேண்டும்.
ஒவ்வொரு நாளும் என்னென்ன விஷயங்களை செய்யப்போகிறோம் என்பது பற்றி முன் கூட்டியே திட்டமிட்டு அட்டவணை தயாரித்து அதன்படி செயல்படுவது நல்லது.
நேர மேலாண்மையை கடைப்பிடிப்பது அவசியமானது. அது சுய விழிப்புணர்வை அதிகரிக்க செய்யும். உடல்நலம் மற்றும் மன நலத்திற்கும் நன்மை தரும்.
உடற்பயிற்சி, தியானம், யோகாசனம் ஆகிய மூன்றுக்கும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை செலவிடுவது உடல் நலத் துக்கும், மன நலத்துக்கும் இன்றியமையாதது.
காலை வேளையில் தியானம் மேற்கொள்வதும் சிறப்பானது. தளர்வான நிலையில் உட்கார்ந்து சில நிமிடங்கள் தியானிப்பது தெளிவான மன நிலையை ஏற்படுத்தும்.
காலை உணவை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். காலை வேளையில் சத்தான உணவை சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவும்.