கறுப்பு கவுனி அரிசியில் கொட்டி கிடக்கும் கோடி நன்மைகள்..!
கறுப்பு கவுனி அரிசியில் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் மிக அதிகம்.இவை உடலில் உள்ள உறுப்புகளின் செயல்பாட்டுக்கு அவசியமான ஒன்று.
கறுப்பு கவுனியில் உள்ள ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் உடல் வீக்கங்களைக் குறைக்கச் செய்யும்.
இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆந்தோசயனின் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும்.
உடலில் உள்ள கழிவுகளைச் சுத்திகரித்து வெளியேற்றும் வேலையை இந்த கறுப்பு கவுனி அரிசியில் உள்ள மூலக்கூறுகள் செய்கின்றன.
ரத்தத்தில் சர்க்கரை அளவை சம நிலையில் வைத்து, நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
ரத்தத்தில் இருக்கும் (எல்.டி.எல்) என்னும் கெட்ட கொலஸ்டிராலைக் கரைத்து வெளியேற்றி, (எச்.டி.எல்) என்னும் நல்ல கொலஸ்டிராலை அதிகரிக்கச் செய்யும்.
கறுப்பு கவுனி அரிசி புற்றுநோயை எதிர்த்துப் போராடவும் புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கவும் உதவுகிறது.
கருப்பு கவுனியில் உள்ள புரதங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை முடியின் வளர்ச்சியைத் தூண்டக் கூடியவை.
கருப்பு கவுனியில் இருக்கும் பீட்டா கரோட்டீன் கண் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடும்.