இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் ..!

கிறிஸ்தவர்களின் கடவுளான இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி, கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுவதுடன், அன்பு, மன்னிப்பு மற்றும் இரக்கம் பற்றிய அவரது போதனைகளையும் கொண்டாடுகிறது.
இந்நாளில் குடும்பத்தினருடன் பிணைப்பு, பரிசுகளை பரிமாறிக்கொள்வது மற்றும் ஒன்றாக உணவு தயாரிப்பது வரை உற்சாகமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் ஒன்று.
கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடுவது முதல் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பது வரை இந்நாளில் அரவணைப்பையும் மகிழ்ச்சியையும் வலிறுத்தும் வகையில் கிறிஸ்துவர்கள் இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நாளில் தேவாலய சேவைகளில் கலந்துகொள்வது, பரிசுகளை வழங்குவது மூலமாகவோ, ஏதேனும் தொண்டுகளுக்கு பணம் கொடுப்பது மூலமாகவோ தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த பண்டிகை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால், மத மற்றும் மதச்சார்பற்றவர்களால் கடைபிடிக்கப்படுகிறது.