இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் லிச்சி பழம்..!
லிச்சி பழம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. குறிப்பாக மார்பகப் புற்றுநோய் செல்களை தடுக்க உதவுகிறது.
லிச்சி பழத்தில் உள்ள பாலிசாக்கரைடுகள் மற்றும் பிளாவனாய்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.
ப்ரீ ரேடிகல்களால் உண்டாகும் பிரச்சினைகளை சமாளிக்க தேவையான ஆன்டி ஆன்ஸிடன்ட் லிச்சியில் நிறைந்துள்ளது.
இதில் உள்ள பாலிபினால் ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. இது நீரிழிவு நோயை சந்திப்பவர்களுக்கு சிறந்த தேர்வாகும்.
கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
லிச்சி பழத்தில் இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் ஆற்றல் நிறைந்துள்ளன. இது உடல் பருமன் பிரச்சினையை சரி செய்கிறது.
லிச்சியின் விதைகளில் அல்சைமர் நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது.
மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தேவையான பண்புகள் லிச்சி பழத்தில் நிறைந்துள்ளன.
லிச்சியில் உள்ள பெனோலிக் பண்பு ரத்த அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமான இதயத்திற்கு வழிவகை செய்கிறது.